தமிழ் படங்கள் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் நிறைய உண்டு... அதில் ஒரு பகுதி..

மணிரத்தினத்தின் 'நாயகன்' படத்தில் வரும்
"அவன நிறுத்த சொல்லு.. நா நிறுத்துறேன்" என்ற வசனத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது......

"அவனும் நிறுத்த மாட்டான்,
எவனும் நிறுத்த மாட்டான்,
நாமும் நிறுத்த வேண்டாம்."
என்பது தான்!!!!!
நினைவுகள் நம்மை கொன்றுவிடும்
ரகசியம் நம்மை தின்றுவிடும்
என்று எண்ணம் பல முறை சுழன்று வந்தாலும்
சாதி, மதம்
இனம், மொழி
வீடு, நாடு
போன்ற எல்லா மூலத்தை தாண்டி
தான் யார் என்பதை தன்
நினைவுகளின் வழியாக
ரகசியங்களின் வாயிலாக...
அறிகிறான்..!!
திமுக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து ஒன்று தெரிகிறது..

என்றுமே ஒரு தமிழனின் மன ஓட்டம் என்பதும் ஒரு இந்தியனின் மன ஓட்டம் என்பதும் ஒத்துப்போகாது என்று..!!

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கட்ச தீவை மிட்பது, மத சார்பற்ற ஆட்சி அமைப்பது, மத நல்லிணக்க வரலாறு படைப்பது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது, தனியார் துறையில் இட ஒதிக்கீடு என்று சொல்லபட்ட எந்த வாக்குறுதிகளும் மத்தியில...் நிறைவேறப்போவதில்லை.. இவை எல்லாவற்றிற்க்கும் எதிரான மனப்போக்கையே மத்தியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் கொண்டுள்ளது.. ஆக இது தமிழ் ஓட்டை சேர்ப்பதற்கான ஒரு வெற்று அறிக்கையே அன்றி வேறில்லை..!!

என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கொள்கையில் மாற்றம் என்ற ஒன்றை தவிர வேறு எதிலும் கருணாநிதி அண்ட் கோ தன் சொந்த வருவாய் ஈட்ட வழியில்லை.. ஒரு வேளை இது மத்திய ஆட்சிதானே தமிழ் நாட்டை முழுமையாக முடித்துவிட்டு பின் அதில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்..!!
தூக்கு தண்டனை ரத்து என்று சொல்வது ஒரு வேளை அண்ட் கோ மெம்பரில் யாருக்கேனும் கிடைத்துவிட்டால் என்ற பயம் என்று கிண்டலாக பொது புத்திக்கு தோன்றினாலும் அந்த அளவிற்கு சில்லியாக சிந்திக்க மாட்டார் என்பது நாடறிந்த ஒன்று..!!
அடிப்படை கோட்பாட்டிலிருந்து
விலகும் போது எப்படிப்பட்ட
சித்தந்தங்களாகவோ கொள்கைகளாகவோ
இருந்தாலும் சரி..
இறுதியில்
கதாநாயக வழிபாட்டிலோ அல்லது
கதாநாயக வசைபாட்டிலோ தான்
போய் முடியும் என்பது
எனக்கு தெரிந்த
வரலாற்றுப் பாடம்..
"தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 தேர்தல்".

ச்ச்ச்ச இந்த தடவையும் மிஸ் ஆகிடுச்சு. ஓட்டு போட இல்ல. தேர்தல்ல வேட்பாளரா நிக்குறது..!!

பின் குறிப்பு: மேலே சொல்லப்பட்ட கருத்து எனக்கு like வாங்கவும் நீங்க சிரிக்கவும் மட்டும். அத விட்டுட்டு எவனாவது கீழ அசிங்கமா comment அடிச்சிங்க அவ்வளோதான்.. அப்படியே உங்களால இந்த கொடுமைய தாங்க முடியலனா fb messgeலயோ அல்லது whatsappலயோ திட்டலாம். ஏன்னா அப்பறம் நீங்க எதாவது தப்ப...ா சொல்லி என் ரசிகர்கள் ரசிகைகள் தொண்டர்கள் குண்டர்கள் எதாவது உங்கள செஞ்சுட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. சொல்லிப்புட்டேன். அப்படியும் முடியாது என்ன அழவச்சு பாக்கணும்னு நினைச்சீங்கனா அப்பறம் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுதுன்னு நா வேறு மாநிலம் அல்லது வேறு தேசம் போக வேண்டியது இருக்கும்...

இறுதி குறிப்பு: வர வர கருத்த விட குறிப்பு பெருசா போகுது...

இப்படிக்கு,
தேர்தல் சுவாரஸ்யங்களுடன் 'இந்திய குடிமகன்' துபையிலிருந்து.. நன்றி..!!
ஊடகங்கள் எதை கற்று கொடுத்துருக்கிறதோ இல்லையோ, எதையுமே கேட்டவுடன் நம்பிவிடக்கூடாது என்பதை அனுபவ பூர்வமாக எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது..!!

நன்றி சமுதாயத்தின் அத்துனை தூண்களுக்கும்..!!
நாளைக்கு +2 பரிட்சை ஆரம்பிக்குது.. இந்த நேரம் பாத்து வெளியான #தெகிடி படத்துல "எக்காரணத்த முன்னிட்டு நீங்க சப்ஜக்ட நெருக்கவே கூடாது"னு சொல்றானுங்க..!!??