தமிழுக்கும் தமிழனுக்கும் இன்றைய சூழழில் நடக்கும் பல்வேறு நாசவேலைகளில் தமிழ் புத்தாண்டு தை 1-ஆ அல்லது சித்திரை 1-ஆ என்ற குழப்பத்தில் தமிழனையே தள்ளியதை அந்நாசவேலைகளின் ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கின்றேன்.

"ஹாப்பி டமில் நியு இயர்" என தமிழர்களே சொல்லும் நிலையை காணும் பொழுது இதற்கு காரணமாக இரண்டு பேர் தான் இருக்க முடியும்..!!

ஒன்று தமிழனுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு கூட்டமும்..!!
மற்றொன்று தமிழுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழனும்..!!
ரசிக்கிற மாதிரி நிறைய வசனம் "வீரம்" படத்துல இருந்தாலும் நான் ரசிச்ச ஒரு வசனம்...

தம்பிகள்: தன்மான சிங்கம்..!! அண்ணன் விநாயகம் வாழ்க..!! அண்ணன் விநாயகம் வாழ்க..!!

அண்ணன் விநாயகம் (அஜித்) : முதல்ல இத நிறுத்துங்கடா... நாடு உருப்புடும்...
மாவீரன் அலக்ஸாண்டர் சொன்னாராம்: "நான் எடுத்த முயற்சி சரியா தவறா என்று தெரியாது. அது தவறாக இருந்தாலும் சரியாக மாற்ற முயற்சிப்பேன்"

இன்று காலை mobile bankingஅ ரொம்ப நாள் கழித்து திறந்தேன். கடவுச்சொல் (password) தவறுனு வந்துச்சு. ஒரு வேளை தப்பா தான் அடிச்சுட்டமோனு மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். "You have exceeded maximum tries and your account is blocked. Contact your nearest branches" சொல்லிப்புட்டான் பய புள்ள..
காலங்காத்தாலயே ஒருத்தன் செம்ம கடுப்ப கெளப்பிட்டான்..

'ஜில்லா' படத்தோட கதைய நெட்ல போட்டுருக்கான் படிச்சியான்னு கேட்டா அதுக்கு என்ன சொல்லனும் அவன். ஒன்னு படிச்சேன்னு சொல்லனும்; இல்ல படிக்கலன்னு சொல்லனும்..

அவன் சொல்றான் அண்ணாவோட படத்தெல்லாம் கதை கேக்காம தான் போகனும்.. அப்போ தான் கதை surprise-அ இருக்கும்ங்குறான்.

விடுவனா நான்: எது கதைல surprise-u suspense-a. டேய்.. அப்படி நா என்னனு உன் அண்ணனுக்கு தெரியுமாடா... பேசுவடா பேசுவ .. 11/12th படிக்கும் போது புதிய கீதை, பகவதி, வசீகரா-னு back to back ஹிட் கொடுத்த தளபதிக்கு உதயா flop ஆகிடுச்சுனு சொன்ன பய தான நீ.. பழகுனதுக்கு இதெல்லாம் கேக்கனும்னு இருக்கு..

நண்பனும் எதிரியும் அவர்களா உருவாகுரதில்ல.. நாம்மளா உருவாக்குரதுதான்.. மனசுல வச்சுக்கோ...