ஓட்டு..!!!

என்றோ எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பை தேர்தலின் சில மாதங்களின் முன்பு வெளிவிடுவதில் தெரிகிறது ஒவ்வொரு ஓட்டின் மதிப்பு..!!
இந்த ஓட்டுரிமை இருக்கும் மட்டும் தான் ஒரு சமுகத்தின் குரல் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட/ தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளும் அரசுக்கு எட்டும்..!!

இனி ஒவ்வொரு தனி மனிதனின் குரல் கூட எட்ட வேண்டுமாயின் அது ஒன்றால் மட்டுமே முடியும்.. அது ஒரு தனி மனிதனின் ஓட்டு..!!

நீயா நானாவில் வந்த ஒரு அரசியல் பிரமுகர் சொன்னார்: அரசியல் சாக்கடை அல்ல. வாக்காளர் அட்டை இருக்கும் ஒவ்வருவரும் அரசியல்வாதிதான். தெளிவான மக்கள் அரசியல்வாதி ஆகிறான். தெளிவில்லாத அரசியல்வாதி மக்களாாக ஆகிறான் என்று..!!

அலுவலக அரட்டையில் ஆப்பு...!!!






"நெத்து விஜய் டிவில ஒரு படம் போட்டான். என்ன படம்னு தெரியல. ஒரே ஒரு சீன் தான் பார்த்தேன்.. அதுக்குள்ள படம் முடிஞ்சுடுத்து." என்று சொன்ன ஒருவரிடம்..

"விஜய் டிவிலயா..?? என்ன சீன்னு சொல்லுங்க. நான் என்ன படம்னு சொல்றேன்"னு சொன்னேன்..

உடனே அவங்க "Wheel chairல இருந்த ஒருத்தர KILL பண்ணிட்டு ஒரு சின்ன பொன்ன இன்னோருத்தர் கிட்ட குடுத்துட்டு அந்த ஆளு தன்ன தானே KILL பண்ணிண்டார். அப்றம் போலீஸ்" என்று சொல்லும் போதே..

"ஓ அதுவா.. அந்த படம் பேரு ஓனாயும் ஆட்டுகுட்டியும்"னு சொன்னேன்..

"எப்படி ஆசிஃப் சொல்லியே  முடிக்கல அதுக்குள்ள சொல்லிடீங்க.. இந்த Knowledgeஅ நீங்க கொஞ்சம் படிப்புல காமிச்சேள்னா இந்நேரம் CWA Final முடிச்சுருக்கலாம்ல" அப்படினு சொன்னாங்க..

"ஏங்க விஜய் டிவில போட்ட ஒரு  படத்த ஒரு மாசத்துல இருக்குற வாரத்துல வாரம் போட்டு கொல்லுவான். இது நம்ம ஊர்ல யார கேட்டாலும் சொல்லுவாய்ங்க. அதுக்காக இப்படி ஒடனே CWA முடிச்சுருக்கலாம்னு சொல்லுறது கொஞ்சம் ஓவருங்க"னு  சொன்னேன்.

இப்ப என்ன ஒரே ஒரு குழப்பம்னா இந்த ஆப்பு எனக்கா இல்ல விஜய் டி.விகானு தான்..

நீயா? நானா? ஒன்னு போடனும் போல...!!




அர்விந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு அரசியல் நாடகம், ஜனநாயகத்திற்கு கட்டமைப்பிற்கு (Constitution) எதிரானது - பா.ஜ.க, காங்கிரஸ் குற்றசாட்டு.

பாபர் மஸ்ஜித் இடித்த போது பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கபோதிகளுக்கும், அதை இடித்து விட்டு இனி பாபர் மஸ்ஜித் கட்ட சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று சொன்ன பா.ஜ.க கயவர்களுக்கும் ஜனநாயக கட்டமைப்பை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை..
அர்விந்த் கெஜ்ரிவால் ராஜினாமா..!!!

சில ஆதாயங்களுக்காக கொள்கையை விற்று எதை பார்த்தாலும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கும் பலர் மத்தியில், தான் எடுத்த கொள்கையை நிறைவேற்ற முடியாத சூழலில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இரண்டும் ஒத்துழைக்காத நிலையில், முதல்வர் பதவியை விட்டு ராஜினாமா செய்யும் அளவிற்கு துணிச்சல் கொண்ட அர்விந்த் கெஜ்ரிவால் உண்மையில் ஆச்சிரியத்திற்குரியவர்...!!!

இப்போது ஆச்சிரியபட்டுவோம். நாளை முதல் ஊடங்கங்கள் எழுப்பும் சந்தேகங்களை(??) அலச ஆரம்பிக்கலாம்...
An open discrimination can be broken by Struggle & Strive ;

A Hidden discrimination can be broken by a Serious Silence..!!

WHITE HOUSE DOWN


கடந்த ஆண்டு வெளியான WHITE HOUSE DOWN என்ற ஆங்கில திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன். பகையுணர்வு கொண்டுள்ள சில அமெரிக்க வீரர்களும், பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு அமெரிக்க பாதுகாப்பு படை தலைவனும், பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட ஒரு உயர் அதிகாரியும் சேர்ந்து எப்படி அமெரிக்க அதிபருக்கும் கொன்று, வெள்ளை மாளிகையை தகர்த்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் மூள வைக்க Inside Job என்ற கோட்பாடை தொட்டு சிறப்பான ஒரு அதிரடி திரைப்படமாக எடுக்கப்பட்ட இருந்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் இன்றைய ஊடகங்கள் செய்வது போல இது “அரபிய தீவிரவாத அமைப்பின் சதி” என்று செய்தி காட்டப்படுகிறது. இதை பார்த்த இந்த பாதுகாப்பு படை தலைவனும், சதிகளின் மூல தலைவனும் ஆனா ஒருவன் எப்போதும் போல நம்ம ஊடகம் இது அரபிய தீவிரவாத அமைப்பின் சதி என்று நம் ஊடங்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டது என்று பெருமிதம் சிரிப்பை வெளிப்படுத்துகிறான்.


சரி இப்ப என்னன்னா இந்த காட்சிய எப்படி தமிழ்-ல மொழிபெயர்த்து இருக்கிறான் இன்னைக்கு பார்த்தேன். பார்ப்பதற்கு முன்னாலே தெரியும் இவனுங்க என்ன பண்ணிருப்பனுங்கன்னு. நினைத்த மாதிரியே அரபு நாடு என்ற வார்த்தைய ரொம்ப தெளிவா எடுத்து வைத்துவிட்டு “இஸ்லாமிய தீவிரவாத கூட்டம்”னு மொழிப்பெயர்த்து இருக்குரானுங்க. அவனுங்களே இல்லன்னு சொன்ன கூட இங்க இவனுங்க விட மாட்டானுங்க போல. என்ன பண்றது.. கழிசடைகளும் அடிவருடிகளும் இருக்குறப்போ இது தான் வரும் என்பது பார்க்காமலே தெரியவருவதில் எந்த வித ஆச்சிரியங்களும் இல்லை...