
"நெத்து விஜய் டிவில ஒரு படம் போட்டான். என்ன படம்னு தெரியல. ஒரே ஒரு சீன் தான் பார்த்தேன்.. அதுக்குள்ள படம் முடிஞ்சுடுத்து." என்று சொன்ன ஒருவரிடம்..
"விஜய் டிவிலயா..?? என்ன சீன்னு சொல்லுங்க. நான் என்ன படம்னு சொல்றேன்"னு சொன்னேன்..
உடனே அவங்க "Wheel chairல இருந்த ஒருத்தர KILL பண்ணிட்டு ஒரு சின்ன பொன்ன இன்னோருத்தர் கிட்ட குடுத்துட்டு அந்த ஆளு தன்ன தானே KILL பண்ணிண்டார். அப்றம் போலீஸ்" என்று சொல்லும் போதே..
"ஓ அதுவா.. அந்த படம் பேரு ஓனாயும் ஆட்டுகுட்டியும்"னு சொன்னேன்..
"எப்படி ஆசிஃப் சொல்லியே முடிக்கல அதுக்குள்ள சொல்லிடீங்க.. இந்த Knowledgeஅ நீங்க கொஞ்சம் படிப்புல காமிச்சேள்னா இந்நேரம் CWA Final முடிச்சுருக்கலாம்ல" அப்படினு சொன்னாங்க..
"ஏங்க விஜய் டிவில போட்ட ஒரு படத்த ஒரு மாசத்துல இருக்குற வாரத்துல வாரம் போட்டு கொல்லுவான். இது நம்ம ஊர்ல யார கேட்டாலும் சொல்லுவாய்ங்க. அதுக்காக இப்படி ஒடனே CWA முடிச்சுருக்கலாம்னு சொல்லுறது கொஞ்சம் ஓவருங்க"னு சொன்னேன்.
இப்ப என்ன ஒரே ஒரு குழப்பம்னா இந்த ஆப்பு எனக்கா இல்ல விஜய் டி.விகானு தான்..
நீயா? நானா? ஒன்னு போடனும் போல...!!
No comments:
Post a Comment