கடந்த ஆண்டு வெளியான WHITE HOUSE DOWN என்ற ஆங்கில திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன். பகையுணர்வு கொண்டுள்ள சில அமெரிக்க வீரர்களும், பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு அமெரிக்க பாதுகாப்பு படை தலைவனும், பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட ஒரு உயர் அதிகாரியும் சேர்ந்து எப்படி அமெரிக்க அதிபருக்கும் கொன்று, வெள்ளை மாளிகையை தகர்த்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் மூள வைக்க Inside Job என்ற கோட்பாடை தொட்டு சிறப்பான ஒரு அதிரடி திரைப்படமாக எடுக்கப்பட்ட இருந்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் இன்றைய ஊடகங்கள் செய்வது போல இது “அரபிய தீவிரவாத அமைப்பின் சதி” என்று செய்தி காட்டப்படுகிறது. இதை பார்த்த இந்த பாதுகாப்பு படை தலைவனும், சதிகளின் மூல தலைவனும் ஆனா ஒருவன் எப்போதும் போல நம்ம ஊடகம் இது அரபிய தீவிரவாத அமைப்பின் சதி என்று நம் ஊடங்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டது என்று பெருமிதம் சிரிப்பை வெளிப்படுத்துகிறான்.
சரி இப்ப என்னன்னா இந்த காட்சிய எப்படி தமிழ்-ல மொழிபெயர்த்து இருக்கிறான் இன்னைக்கு பார்த்தேன். பார்ப்பதற்கு முன்னாலே தெரியும் இவனுங்க என்ன பண்ணிருப்பனுங்கன்னு. நினைத்த மாதிரியே அரபு நாடு என்ற வார்த்தைய ரொம்ப தெளிவா எடுத்து வைத்துவிட்டு “இஸ்லாமிய தீவிரவாத கூட்டம்”னு மொழிப்பெயர்த்து இருக்குரானுங்க. அவனுங்களே இல்லன்னு சொன்ன கூட இங்க இவனுங்க விட மாட்டானுங்க போல. என்ன பண்றது.. கழிசடைகளும் அடிவருடிகளும் இருக்குறப்போ இது தான் வரும் என்பது பார்க்காமலே தெரியவருவதில் எந்த வித ஆச்சிரியங்களும் இல்லை...

No comments:
Post a Comment